பகுபதம் போலப் பகுத்துப் பார்த்தால் பகுதி விகுதி முதலிய பயன்விளைவின்றி, இடுகுறியாய்ப் பகுக்கப்படாமல் பகுதி மாத்திரமேயாய்நிற்கும் பெயர் – வினை – இடை – உரி – என்ற நால்வகைச் சொல்லும்பகாப்பதமாம்.எ-டு : நிலம், நீர்; நட, வா; மன், கொன்; உறு, கழி (நன்.131)