பகாப்பதம் போல்வன

பகாப்பதம் பகுக்கப்படாத இயல்பின்கண்ணே மிக்குச் செல்லும் எனவே,பின்வரும் பதங்கள் முடிந்த இயல்பின் கண்ணும் சிறுவரவிற்றாகப்பகாப்பதம் கொள்ளப்படும். அவை பகுக்கப்படினும் பகாப்பதம் போல்வனவேஎன்றவாறு. அவை வருமாறு :அவன், அவள், அவர், தமன், தமள், தமர் என்றாற்போல்வன. இவை ஈறுபகுக்கப்படினும் பகுதி வேறு பொருள்படாதன.சாத்தன், கொற்றன் – என்றாற் போல்வன சாத்தையுடையான் சாத்தன், கொற்றையுடையான் கொற்றன் என்றாற் போல ஈறு பகுக்கப்பட்டுப் பகுதி வேறுபொருள்படும்; இடுகுறிமாத்திரை யாயே நிற்குமிடத்து அவ்வாறுபொருள்படா.கங்கை கொண்ட சோழபுரம், சோழனலங்கிள்ளி, பாண்டியன் பல்யாகசாலைமுதுகுடுமிப் பெருவழுதி என்றாற் போல்வன நிலைமெழி வருமொழியாகப்பகுக்கப்பட்டுப் பல பொருள் உணர்த்தினும், தொன்றுதொட்டு ஒருபிண்டமாயஒரு பொருளையே உணர்த்தி நிற்பன.மேலும், சாத்தன் சாத்தி முடவன் முடத்தி என்றாற்போலும்விரவுப்பெயர்கள் பகுதிவிகுதியாகப் பகுக்கப்படினும், விகுதி வகையான்உயர்திணை ஒருமையே யன்றி அஃறிணை ஒருமையும் இவை உணர்த்தும் என்றற்குவிதி இல்லாமையால், உயர்திணையோடு அஃறிணை விரவி வரும் விரவுப்பெயர்களும் சிறுபான்மை பகாப்பதம் போல்வனவாம். (இ. வி. எழுத். 40)