பகாப்பதம், பகுபதம் தன்னொடும்பிறிதொடும் புணர்தல்

எ-டு : பொன்முடி, பொன்கொள் – பெயரொடு பெயர், பெயரொடு வினை; வாபோ, உண் சாத்தா – வினை யொடு வினை, வினையொடு பெயர்; ‘அது மற்றம்ம தானே’ (சீவக. 2790) – இடையோடு இடை; ‘அது கொல் தோழி காம நோயே’ (குறுந். 5) – பெயரோடு இடை; ‘கொம்மைக் குழகு ஆடும்’ – உரியோடு உரி; ‘ மல்லற் செல்வமொடு ’ – உரியொடு பெயர்;பதம் நான்கும் தனித்தனியே தன்னொடும் பிறிதொடும் புணர்ந்தன.மலையன் மன்னவன், மலையன் மன் – பெயர்ப் பகுபதத்தொடுபெயர்ப்பகுபதமும் பெயர்ப்பகாப்பதமும்.உண்டான் தின்றான், உண்டான் சாத்தன் – வினைப் பகுபதத் தொடுவினைப்பகுபதமும் பெயர்ப் பகாப் பதமும்.பகுபதம் தன்னொடும் பிறிதொடும் தனித்தனியே புணர்ந்தன.(நன். 150 மயிலை.)