னகரஈற்று வேற்றுமைப் புணர்ச்சி

னகரஈறு வேற்றுமைப்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின் றகரமாகத் திரிந்துபுணரும்.எ-டு : பொற்குடம், பொற்சாடி, பொற்றூதை, பொற் பானை, (தொ. எ. 332நச்.)குயின் என்ற சொல் இயல்பாகப் புணரும்.எ-டு : குயின்குழாம், குயின்றோற்றம்கான்கோழி, கோன்குணம், வான்கரை – எனச் சிலவும் இயல்பாகப் புணரும்.(335 உரை)எகின் என்னும் மரப்பெயர் அம்முச்சாரியை பெற்றுப் புணரும்.எ-டு : எகினங்கோடு, எகினஞ்செதிள், எகினந்தோல், எகினம்பூ(336)எகின் என்னும் அன்னத்தின் பெயர் அகரச்சாரியை பெற்று, வன்கணம் வரின்வல்லெழுத்தோ இனமெல்லெழுத்தோ பெற்றும், ஏனைய கணங்கள் வரின்அகரப்பேற்றோடு இயல்பாயும் புணரும்.எ-டு : எகினக்கால், எகினங்கால்;எகினஞாற்சி, எகின வலிமை, எகினவ(அ) டைவு; எகின் சேவல், எகினச் சேவல் – என்ற உறழ்ச்சி முடிவு முண்டு.இஃது ஆறன் தொகை. (337)எயின் முதலிய கிளைப்பெயர்கள் எயின்குடி, எயின்பாடி- என இயல்பாகப்புணரும். சிறுபான்மை எயினக்கன்னி, எயினப் பிள்ளை – என அக்கும்வல்லெழுத்தும், எயினவாழ்வு – என அக்கும் பெற்றுப் புணரும். (338உரை)பார்ப்பான் + கன்னி, குமரி, சேரி, பிள்ளை – என்பன ஆகாரம் அகரமாகக்குறுகி அக்கும் வல்லெழுத்தும் பெற்றுப் பார்ப்- பனக்கன்னிபார்ப்பனக்குமரி பார்ப்பனச்சேரி பார்ப்பனப்- பிள்ளை – என முடிதலும்,பார்ப்பனவாழ்வு- என அக்கு மாத்திரம் பெற்று முடிதலும் உள.வெள்ளாளன் + குமரி, பிள்ளை, மாந்தர், வாழ்க்கை, ஒழுக்கம் – என்பனவெள்ளாண்குமரி – என்றாற்போல நிலைமொழி யீற்று ‘அன்’ கெட நின்ற ளகரம்ணகரமாக்கிப் புணர்க்கப் படும். அதுவே இடையிலுள்ள ளகரம் கெடுத்து முதல்நீட்டி வேளாண்குமரி – முதலாக வருதலுமுண்டு.பொருநன்+வாழ்க்கை = பொருநவாழ்க்கை – எனப் புணரும்.வேட்டுவன் +குமரி =வேட்டுவக்குமரி எனப் புணர்வது மரூஉவழக்கு. (338உரை)மீன் என்ற பெயர் னகரம் றகரத்தோடு உறழ்ந்து முடியப் பெறும்.எ-டு : மீன்கண், மீற்கண்; மீன்றலை, மீற்றலை (339)தேன் + குடம் = தேன்குடம், தேற்குடம், தேக்குடம்- என்றாற் போல,தேன் என்பது வல்லெழுத்து இயையின் இயல்பாயும், னகரம் றகரமாகத்திரிந்தும், னகரம் கெட்டு வருமொழி வல்லெழுத்து மிக்கும் புணரும்.னகரம் கெட்டு இனமெல்லெழுத்து மிக்குத் தேங்குடம் – தேஞ்சாடி -தேந்தூதை – தேம்பானை – என முடிதலு முண்டு. (340, 341)தேன் என்பதன் முன் மென்கணம் வரின் ஈற்று னகரம் கெட்டும் கெடாமையும்புணரும். எ-டு : தேன்ஞெரி தேஞெரி, தேன்மொழி தேமொழி (342). மேலும்தேஞ்ஞெரி, தேந்நுனி, தேம்மொழி – என னகரம் கெட்டு மெல்லெழுத்து மிகுதலுமுண்டு;தேஞெரி, தேநுனி, தேமொழி – என னகரம் கெட்டு இயல்பாய்முடிதலுமுண்டு. தேன் +இறால் =தேனிறால் எனவும், தேத்திறால் எனவும்புணரும். தேன்+அடை= தேத்தடை எனவும், தேன் +ஈ=தேத்தீ எனவும் புணரும்;தேனடை, தேனீ – என்ற இயல்பும் ஆம். (343, 344 உரை)மின் பின் பன் கன் – என்பன வேற்றுமைப்புணர்ச்சிக்கண் தொழிற் பெயர்போல, வன்கணம் வரின் உகரமும் வல் லெழுத்தும், மென்கணமும் இடைக்கணத்துவகரமும் வரின் உகரமும், யகரம் வரின் இயல்பும்,உயிர்வரின்தனிக்குறில்முன் ஒற்றாகிய னகரம் இரட்டுதலும் பெற்றுப் புணரும்.எ-டு : மின்னுக்கடுமை பின்னுக்கடுமை பன்னுக்கடுமை கன்னுக்கடுமை;மின்னுஞெகிழ்ச்சி மின்னுஞாற்சி; மின்னுவலிமை; மின்யாப்பு; மின்னருமை.பிறவும் முடிக்க.மின் முதலியன மின்னுதல் முதலிய தொழில்களையும் மின்னல்முதலியவற்றையும் உணர்த்தித் தொழிற்பெயராகவும் பொருட் பெயராகவும்வரும். (345)கன் என்பது அகரச்சாரியை பெற்றுக் கன்னக்குடம்- கன்ன ஞாற்சி -கன்னவலிமை – எனவும், கன்னக்கடுமை கன்னங் கடுமை – எனவும்புணர்தலுமுண்டு. (346)சாத்தன் +தந்தை =சாத்தந்தை, ஆதன் +தந்தை =ஆந்தை, பெருஞ்சாத்தன் +தந்தை = பெருஞ்சாத்தன்றந்தை, கொற்றன் + கொற்றன் = கொற்றங்கொற்றன்,கொற்றன் + குடி = கொற்றங் குடி, கொற்றன் +மங்கலம் = கொற்றமங்கலம்,தான் – பேன்- கோன்+ தந்தை= தான்றந்தை – பேன்றந்தை – கோன்றந்தை – எனமுடியுமாறு கொள்க. (இவை இவ்வீற்றெழுத்துப் பற்றி முன்னர்ப்பிறவிடங்களில் முடிக்கப்பட்டுள. ஆண்டு நோக்குக.) (347, 351)அழன் + குடம் = அழக்குடம் – என ஈறு கெட்டு வல்லெழுத்து மிக்கது.வன்கணம் வரின் னகரஈறு கெட வல்லெழுத்து மிகும் என்க. (354)முன் +இல் =முன்றில் – என இடையே றகரமெய் பெற்றுப் புணரும்.(355)‘பொன்’ என்பது செய்யுளில் ‘பொலம்’ என்றாகும். பொலம் என்பதன் ஈற்றுமகரம் வன்கணம் வரின் இனமெல்லெழுத் தாகும்; மென்கணம் வருமிடத்துக்கெடும்.எ-டு : பொலங்கலம், பொலஞ்சாடி, பொலந்தூதை, பொலம்படை, பொலநறுந்தெரியல், பொலமலர். (356 உரை)