னகரஈற்று இயற்பெயர்ப் புணர்ச்சி

சாத்தன் கொற்றன் முதலிய இயற்பெயர் முன் தந்தை என்ற முறைப்பெயர்வருமொழியாய் வரின், தந்தை என்பதன் தகரம் கெட அஃது ‘அந்தை’ எனநிற்கும். சாத்தன் முதலியவற்றில் ‘அன்’ ஈறு கெட, அவை சாத்த்-முதலியவாக நிற்கும்; பின்னர்ப் புணரும்வருமாறு : சாத்தன் +தந்தை > சாத்த்+ அந்தை =சாத்தந்தை; கொற்றன் +தந்தை > கொற்ற் +அந்தை = கொற் றந்தை; சாத்தன் றந்தை, கொற்றன் றந்தை -என்ற இயல்பு முடியும் கொள்க. (தொ. எ. 347 நச்.)ஆதன் பூதன் – என்பனவற்றின் முன் ‘தந்தை’ வரின், நிலை மொழிகளின்‘தன்’ என்ற சினையும் வருமொழித் தகரமும் கெட்டு முடியும்.வருமாறு : ஆதன்+ தந்தை > ஆ + ந்தை = ஆந்தை; பூதன்+ தந்தை > பூ + ந்தை = பூந்தை; ஆதந்தை, பூதந்தை – எனப் புணர்தலுமுண்டு.(348 உரை)அழான் +தந்தை =அழாந்தை , புழான் +தந்தை =புழாந்தை- எனவும் வரும்.(தொ. எ. 347 நச். உரை)பெருஞ்சாத்தன் முதலிய அடையடுத்த இயற்பெயர்கள் தந்தை என்ற சொல்லோடுஇயல்பாகப் புணரும்.பெருஞ்சாத்தன் றந்தை, கொற்றங்கொற்றன் றந்தை – என வருமாறு காண்க.(349)முதல் இயற்பெயர் தந்தை பெயராக, வருமொழி மகன் பெயராக வரின்,நிலைமொழியீற்று ‘அன்’ கெட்டு அம்முச் சாரியை வந்து புணரும்.எ-டு : கொற்றன் + கொற்றன் > கொற்ற் +அம் + கொற்றன் = கொற்றங்கொற்றன்சாத்தன் + கொற்றன் > சாத்த் + அம் +கொற்றன் = சாத்தங் கொற்றன்கொற்றன்+ குடி=கொற்றங்குடி, சாத்தன்+ குடி =சாத்தங் குடி – என அன்கெட்டு அம்முப் பெற்று வழங்கும் தொடர் களும் உள.கொற்றன் +மங்கலம், சாத்தன்+ மங்கலம் – என்பன நிலை மொழியீற்று ‘அன்’கெட்டு அம்முப் புணர்ந்து அம்மின் மகரம் கெட, கொற்றமங்கலம்சாத்தமங்கலம் – என முடிந்தன.வேடன் + மங்கலம், வேடன் + குடி – என்பன ‘அன்’ கெட்டு அம்முப்புணர்ந்து நிலைமொழி டகர ஒற்று இரட்ட, வேட்டமங்கலம் வேட்டங்குடி – எனமுறையே அம்மின் மகரம் கெட்டும் வருமொழி வல்லொற்றுக்கு இனமான மெல்லெழுத்தாகத் திரிந்தும் முடிந்தன. ( 350 உரை)தான் பேன் கோன் – என்ற இயற்பெயர்கள் வருமொழி முதற் கண் தகரம்றகரமாகத் திரியும்; பிற வன்கணம் வருமிடத்து இயல்பாகப் புணரும்.எ-டு : தான்றந்தை பேன்றந்தை கோன்றந்தை; தான்கொற் றன் பேன்கொற்றன் கோன் கொற்றன். (351)