வேற்றுமைக்கண் நிலைமொழியீற்று னகரம் வருமொழி முதற்கண் வல்லினம்வரின் றகரம் ஆகும்; பிறவரின் இயல் பாகும்; அல்வழிக்கண் வன்கணம்வரினும் இயல்பாகும்.எ-டு: பொன்+ கழஞ்சு=பொற்கழஞ்சு, பொன்+தகடு =பொற்றகடு:வேற்றுமைக்கண், வல்லினம் வர னகரம் றகரம் ஆதல்; பொன்ஞாற்சி, பொன்யாப்பு: மெலிஇடைவர இயல்பு ஆதல்; பொன்கடிது, ஞான்றது, யாது : அல்வழிக்கண்மூவின மெய் வரினும் னகரம் இயல்பு ஆதல்.தனிக்குறிலைச் சாராது ஈரெழுத்து ஒருமொழி தொடர்மொழி களைச் சார்ந்துநிலைமொழியீற்றில் வரும் னகரம், வரு மொழிக்கு முதலாக வந்த நகரம்னகரமாகத் திரிந்தவிடத்துத் தான் கெடும். இருவழியும் கொள்க.எ-டு: கோன் + நல்லன், நன்மை= கோனல்லன், கோனன்iம; அரசன்+நல்லன்,நன்மை = அரசனல்லன், அரச னன்மை; செம்பொன் + நல்லன், நன்மை = செம்பொனல்லன், செம்பொனன்மை (நன். 209, 210)னகரஈற்றுச் சாதிப்பெயர், வல்லினம் வருமொழிமுதற்கண் வரத் திரியாது இயல்பாதலும்,அகரச்சாரியை பெறுதலும் வேற்றுமைப்புணர்ச்சிக்கண்ணவாம்.எ-டு : எயின் +குடி, சேரி, தோட்டம் பாடி = எயின்குடி, சேரி,தோட்டம், பாடி; எயினக்குடி, எயினச்சேரி, எயினத்தோட்டம், எயினப்பாடி -என வரும்.எயினமரபு, எயினவாழ்வு, எயினவ(அ)ணி – என ஏனைக் கணத்தும்வேற்றுமைக்கண் அகரச்சாரியை கொள்க.எயினப்பிள்ளை, எயினமன்னவன் – என அல்வழிக் கண்ணும்அகரச்சாரியைப்பேறு கொள்க. (நன். 212)மீன் என்னும் பெயரீற்று னகரம் வேற்றுமைப்புணர்ச்சியில் வன்கணம்வருவழி றகரத்தோடு உறழும் (றகரமாகத் திரிந்தும் திரியாமலும்வரும்).எ-டு: மீன் + கண், செவி =மீற்கண், மீன்கண்;மீற்செவி, மீன்செவி(நன். 213)தேன் என்னும் னகரஈற்றுப்பெயர் மூவின மெய்களொடும் புணருமிடத்துஇறுதி னகரம் இயல்பாதலும். மென்கணம் வருவழி இறுதி இயல்பாதலேயன்றிக்கெடுதலும், வன்கணம் வருவழி இறுதி இயல்பாதலேயன்றிக் கெடுமிடத்து வந்தவல்லினமோ அதன் மெல்லினமோ மிகுதலும் ஆம். இவ்விதி இருவழிக்கண்ணும்கொள்க.அல்வழிப் புணர்ச்சி:தேன்கடிது, தேன் ஞான்றது, தேன்யாது இயல்பு; தேன்மொழி, தேமொழி -மெலி மேவின் இயல்பும், இறுதிஅழிவும்; தேன்குழம்பு, தேக்குழம்பு,தேங்குழம்பு – வலிவரின் இயல்பும், வலிமெலி உறழ்வும்வேற்றுமைப் புணர்ச்சி :தேன்கடுமை, தேன்மாட்சி, தேன்யாப்பு – இயல்பு; தேன்மலர், தேமலர் -மெலி மேவின் இயல்பும், இறுதிஅழிவும்; தேன் குடம், தேக்குடம்,தேங்குடம் – வலிவரின் இயல்பும், வலி மெலி உறழ்வும் (நன். 214)எகின் என்னும் அன்னப்பறவையை உணர்த்தும் னகர ஈற்றுப் பெயர்(அல்வழியில் இயல்பாதலே யன்றி) வேற்றுமைப் புணர்ச்சியிலும் வன்கணம்வருமிடத்தே இறுதி னகரம் இயல் பாதலும், இருவழியிலும் அகரச்சாரியை மருவவல்லெழுத் தாவது அதற்கு இனமெல்லெழுத்தாவது மிகுதலும் ஆம்.எ-டு : எகின்கால், சினை, தலை, புறம் – வேற்றுமையில் வலிவரஇயல்பாதல்; எகின் +புள் =எகினப்புள், எகினம்புள் – அல்வழியில் அகரம்வர வலிமெலி மிகுதல்; எகின் +கால் = எகினக்கால், எகினங்கால் -வேற்றுமையில் அகரம் வர, வலிமெலி மிகுதல்.எகினமாட்சி, எகின வாழ்க்கை, எகினவ(அ)ணி – என ஏனையகணத்தின்கண்ணும் அகரச்சாரியைப் பேற்றினைக் கொள்க. (நன். 215)குயின், ஊன்- என்னும் னகரஈற்றுப் பெயர்ச்சொற்கள்வேற்றுமைப்புணர்ச்சிக்கண்ணும் இயல்பாகப் புணரும்.எ-டு : குயின்கடுமை, ஊன்சிறுமை (நன். 216)மின் பின் பன் கன் – என்ற நான்கு சொற்களும், அல்வழி வேற்றுமை எனஇருவழியும், மூவின மெய்களொடும் புணரு மிடத்து, தொழிற்பெயர் போலஉகரச்சாரியை பெற்றுப் புணரும். கன் என்பது உகரச்சாரியையேயன்றிஅகரச்சாரியை பெற்று, வன்கணம் வருவழி வந்த வல்லெழுத்தாதல் அதன் இனமானமெல்லெழுத்தாதல் மிகப் பெறும். (பிற சொற்க ளுக்கும் வன்கணம் வருவழிசாரியைப் பேற்றொடு வலி மிகுதல் கொள்க.)எ-டு : மின் + கடிது, நன்று, வலிது = மின்னுக் கடிது,மின்னுநன்று, மின்னு வலிது – அல்வழி; மின் + கடுமை, நன்மை, வலிமை = மின்னுக்கடுமை, மின்னுநன்மை, மின்னுவலிமை – வேற்றுமை.இவ்வாறே பின் – முதலிய மூன்று சொற்கும் கொள்க.கன் + தட்டு = கன்னத்தட்டு, கன்னந்தட்டு – அல்வழி(இருபெயரொட்டு); கன் + தூக்கு = கன்னத்தூக்கு, கன்னந்தூக்கு -வேற்றுமை .(மின்- மின்னல்; பன் – ஒருபுல் ; கன் – சிறுதராசுத்தட்டு)தன், என் – என்பவற்று ஈற்று னகரம் வருமொழி வல்லெழுத் தோடு உறழும்.எ-டு : தன் + பகை =தன்பகை, தற்பகை; என்+பகை = என்பகை, எற்பகை.‘நின்’ ஈறு இயல்பாகப் புணரும். எ-டு: நின்பகை (நன். 218)மின்கடிது, பன்கடிது; மின்கடுமை, பன்கடுமை – என இரு வழியும்இயல்பாகப் புணர்தலும், மான்குளம்பு வான்சிறப்பு- என வேற்றுமைக்கண்இயல்பாகப் புணர்தலும், வரிற் கொள்ளும் எனச் செயின் என்னும் வாய்பாட்டுவினை யெச்சம் ஈற்று னகரம் றகரமாகத் திரிந்து வருதலும் சிறு பான்மைகொள்ளப்படும். (சங். உரை)