னகரஈற்றுத் தன்மைப்பெயர் யான் என்பது. அஃது அல்வழிக் கண் யான்கொடியேன், யான் செய்வேன் – என்றாற் போல, வல்லினம் வரினும் இயல்பாகப்புணரும்.வேற்றுமைப்புணர்ச்சிக்கண், உருபுபுணர்ச்சிபோல யான் என்பது என் எனத்திரிந்து என்னை என்னான் என்று உருபேற்பது போல, என் கை – என் செவி -என்றலை- என்புறம் -என வருமொழியொடு புணரும்; இயல்புகணத்தின்கண்ணும்என்ஞாண் – என்னூல் – என்மணி, என்யாழ் – என்வட்டு; என்ன(அ)டை -என்னா(ஆ)டை – எனப் புணரும்.இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்கண், என்+புகழ்ந்து = எ ற் புகழ்ந்து, என் + பாடி = எற்பாடி – என னகரம் றகரமாகத் திரியும்.(தொ.எ.352, 353 நச். உரை)