மன் சின் – ஆன் ஈன் பின் முன் – என்ற னகரஈற்று அசைச் சொற்கள்இரண்டும், ஏழாம்வேற்றுமைப்பொருள் உணர நின்ற இடைச்சொற்கள் நான்கும்,னகர ஈற்று வினையெச்ச மும், வன்கணம் வருமிடத்து, னகரம் றகரமாகத்திரிந்து புணரும்.எ-டு : ‘அதுமற் கொண்கன் தேரே’‘காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை’ (அக .நா. 7),ஆற்கொண்டான், ஈற்கொண்டான், பிற்கொண் டான், முற்கொண்டான்; வரிற்கொள்ளும், சொல்லிற் செய்வான் (தொ. எ. 333 நச். உரை)ஆன்கொண்டான், ஈன்கொண்டான் – என்ற இயல்பும் கொள்க. ஊன் கொண்டான் -என இயல்பாகவே முடியும். ஆன், ஈன் பெயர் நிலையின. (333 நச். உரை)அவ்வயின் இவ்வயின் உவ்வயின் எவ்வயின் – என ஏழாம் வேற்றுமைஇடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்கள், வன்கணம் வருமிடத்து, னகரம்றகரமாகத் திரிந்து முடியும்.எ-டு : அவ்வயிற் கொண்டான், இவ்வயிற் கொண்டான், உவ்வயிற்கொண்டான், எவ்வயிற் கொண்டான்.சுட்டு வினா அடுத்த வயின் பெயர்நிலையினது. (தொ. எ. 334)மின் பின் பன் கன் – என்பன, தொழிற்பெயர் போல உகரம் பெற்றும்,வன்கணம் வரின் வலி மிக்கும், ஏனைக் கணத்து இயல்பாயும், யகரம் வருவழிஉகரம் இன்றியும், உயிர் வருவழி னகரம் இரட்டியும் புணரும்.எ-டு : மின்னுக் கடிது;மின்னு நீண்டது, வலிது; மின் யாது; மின்னரிது,பின் பன் கன் – என்பவற்றுக்கும் இவ்வாறே முடிக்க.(-345)கன் என்பது வன்கணம் வரின் அகரமும் மெல்லெழுத்தும் பெறும்;ஏனைக்கணத்து அகரம் மாத்திரமே பெறும்;யகரம் வரின் இயல்பும், உயிர் வரின் இரட்டுதலும் கொள்க.எ-டு : கன்னங் கடிது; கன்ன ஞான்றது, கன்ன வலிது; கன் யாது,கன்னரிது. (-346)