னஃகான் றஃகான் ஆதல்

பத்து என்னும் நிலைமொழி எண்ணுப்பெயரின்முன் உயிர்முத லாகிய அகல் -உழக்கு- என்ற அளவுப்பெயர்களும் அந்தை என்ற நிறைப் பெயரும் வருவழிஇடையே இன்சாரியை வரும். அதன் னகரம் றகரமாகத் திரிய, பத்து +இன்=பதின்;பதின் +அகல்=பதிறகல், பதின் +உழக்கு =பதிறுழக்கு, பதின்+ அந்தை= பதிறந்தை – என வரும். றகரத்தைப் பிறப்பிடம் நோக்கி நன்கு ஒலித்தலால்இரட்டித்தல்ஓசை ஏற்பட, பதிற்றகல்- பதிற் றுழக்கு- பதிற்றந்தை – எனஒலிக்கும். பிற்காலத்தவர் றகரத்தை நன்கு ஒலியாராய் ரகரம்போலஒலித்தலான், ஓசை அழுத்தம் காட்ட இரட்டித்து எழுதும் நிலை ஏற்பட்டது.பொறை காபு பாகு- என்பன பிற்காலத்தில் பொற்றை காப்பு பாக்கு – என ஒற்றுமிக்கு வழங்கலாயினமை நோக்கத்தகும். (எ.ஆ.பக். 99, 100)