நோ1 nō, நகரமெய்யும் ஓகார உயிரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய் எழுத்து; the compound of ‘n’ and ‘o’
[ந் + ஒ – நோ. இஃது ஒரெழுத்து ஒரு சொல்லாகவும் (ஒருமொழியாகவும்); வரும்.]
நோ2 nōtal, 17 செ.கு.வி. (v.i.)
1. நோவுண்டாதல்; to feel pain ache, suffer. smart.
கால் நொந்தது.
2. வருந்துதல்; to be grieved, distressed in mind, to feal.
“ஊரன்மீ தீப்பறக்க நொந்தேனும் யானே.” (நாலடி,389);.
“நோதல் எவன்மற்று நொந்தார்என்று அஃது அறியும் காதலர் இல்லா வழி” (குறள்,1308);.
3. துன்பத்தைச் சொல்லுதல்; to complain.
“நோவற்க நொந்த தறியார்க்கு” (குறள்,877);.
4. சமைத்த வுண்டி பதனழிதல்; to be injured, bruished, as a plant, fruit;
to be spoiled, as boiled rice.
“நொந்தன்னம்” (பதார்த்த.1459);.
சோறு நொந்துபோய் விட்டது. (உ.வ.);.
5. வறுமைப்படுதல்; to be impoverished, to grow poor.
நொந்த குடி.
6. துன்பப்படுதல்; to suffer.
7. மெலிதல்; to lean.
8. நொய்ய தாகுதல்; to light.
9. தளர்தல்; to loose.
ம.நோ(க);. க.நோ; தெ.நொச்சு, நொகுலு; கோத. நொவு; துட. நு; து. நோபுனி; கொலா. ஒய் (wound);; நா(ச);. ஒய் (to be painfufu);; பர். நொவ்; கட. நொய் (to be painful);; கோண். நொய்யாநா; கூ. நோவ; குவி. நோகி; குரு. நுஞ்ச்நா;மா. நுந்சே.
[நுள் → நொள் → நொய் → நோய் → நோ → நோ-தல்(சு.வி.40);. நுள் = சிறுமை, மென்மைதுன்பம்]
வறுமையும் நோய் போன்ற துன்பமாகக் கருதப்படுவதால், நோய் நொடி யென்றும், நோவு நொடி என்றும் இணைத்துச் சொல்வது மரபு.
நோ3 nōtal, 15 செ.குன்றாவி. (v.t)
வெறுத்தல்; to hate.
“ஏதிலரை நோவதெவன்” (நீதிநெறி.25);.
[நோய்1 → நோ → நோ-தல்.]
நோ4 nō, பெ. (n.)
1. வலி; aching, pain, smart.
2. துன்பம்; distress, grief.
“திறன் அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று” (குறள்,157);.
3. நோய் (வின்.);; Illness.
4. சிதைவு (வின்.);; injury, bruise, as in the body, a tree, a fruit.
5. நலிவு, வலிமைகுறைவு; weakness, infirmity.
[நோய்1 → நோ.]