நோல்1 nōltalnōṟṟal, 10செ.குன்றாவி. (v.t.)
1. பொறுத்தல்; to endure, suffer patiently, as hunger.
“உண்ணாது நோற்பார் பெரியர்” (குறள்,160);.
2. மேற்கொள்ளல்; to practice.
மறவாமே நோற்பதொன் றுண்டு (குமர.பிர.நீதிநெறி.20);.
3. வலிமை; strength.
“நோக்கியெ திருறநின்ற நோலாரும்படை வியந்தே” (அருணகிரிபு. அருந்தவ.125);
நோல்2 nōltal, 17 செ.கு.வி. (v.i.)
1. தவஞ்செய்தல்; to do penance, practice, austerities.
“நோற்றோ ருறைவது” (மணிமே.17:65);
2. நோன்பை மேற்கொள்ளுதல்; to observe a religious fast.
பாவை நோன்பு நோற்றாள்.
தெ.நேட்சு; க.நோன்;ம.நோல்க.
நோல்3 nōl, பெ. (n.)
சடங்கு (கிரியை);; a means of attaining salvation.
“நோக்கினைய நோலினையு முடைத்தாமால்” (சிவதரு. சிவஞானபோ.18);.