நோலாதவர் nōlātavar, பெ. (n.)
தவஞ் செய்யாதவர்; one who does not having penance;
“இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்” (குறள்,270);.
[நோல் → நோலாதவர் நோல் = தவம்செய்தல். ஆ-எதிர்மறை இடைநிலை.]