நோய்1 nōy, பெ. (n.)
1. மனிதனின், விலங்கின், பயிரின் உடல் நல பாதிப்பு; பிணி; malady, distemper, ailment, sickness, disease.
“நோயிகந்து நோக்குவிளங்க” (மதுரைக்.13);.
நோயைத் தக்க நேரத்தில் தடுக்காததால் விளைச்சல் பாதித்து விட்டது.
“காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந் நோய் குறள்,1227).
நோய் கொண்டார் பேய் கொண்டார். (பழ.);
2. துயரம் (பிங்.);; sorrow, grief.
3. துன்பம்; affliction, trouble.
“அதிரவருவதோர் நோய்” (குறள்,429);.
4. குற்றம்; fault.
“பகலென்னும் பண்பின்மை பாரிக்கும்நோய்” (குறள்,851);.
5. அச்சம்; dread, fear.
“நோயுடை நுடங்குசூர்
” (பரிபா.5:4);.
6. நோவு (வின்.);; ache, pain. smart.
“நோவு ஒரு பக்கம் இருக்கச் சூடு ஒரு பக்கம் போட்டாற் போல” (பழ.);.
“நோய்க்கிடங் கொடேல்” (பழ.);.
ம. நோயி.
[நுல்(நோதல்); → நுள் → நொள் → நோள் → நோய் (வே.க.);]
நோய்2 nōyttal, 4.செ.கு.வி. (v.i.)
1. பிணியால் வருந்துதல்; to be or become sickly or diseased.
2. நோயால் மெலிதல்; to be broken in constitution, to be debilitated.
3. மரம்,பயிர் வாடுதல்; to wither, as trees, crops.
4. நிலம் சாரமற்றுப்போதல்; to become poor or worn out, as lands.
[நோய்1 → நோய்2-த்தல்]
நோய்3 nōytal, 2செ.கு.வி (v.i.)
நோய்2 பார்க்க;see ndy2,
பயிர் நோய்ந்து போய்விட்டது. (நெல்லை);
[நோய் → நோய்3-தல்]