நோய்யெதிர் ஆற்றல் nōyyedirāṟṟal, பெ. (n.)
நோயை உண்டாக்கும் நுண்ணுயிரிகளால் நோய் உண்டாகாதவாறு உடலில் உள்ள எதிர்க்கும் ஆற்றல்; immunity.
[நோய் + எதிர் + ஆற்றல்]
நோய்யெதிர் ஆற்றல் என்பது ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனி. நோயை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் பலவகைப் படும். ஆதலால் ஒருவர் ஒரு நோய்க்கு எதிராற்றல் உடையவராகவும், வேறு ஒரு நோய்க்கு உட்படுபவராகவும் இருக்கலாம். அம்மை நோயை எதிர்க்கும் ஆற்றல் உடையவராக இருந்தாலும், ஈளைநோயை எதிர்க்கும் ஆற்றலில்லாதவராகவும் இருக்கலாம்.
நோய்யெதிர் ஆற்றல் இயற்கை, செயற்கை என இருவகைப்படும். இயற்கை யென்பது பிறக்கும் போதே உடலில் அமையும் எதிர்ஆற்றல்.
செயற்கையென்பது பிறந்தபின் உடலில் அமைவது. நோய் வருமுன்பே, செயற்கை முறைகளால், அதாவது கொல்லப்பட்ட அல்லது ஆற்றல் இழந்த நுண்ணுயிரிகளைக் கொண்டு உண்டாக்கப்பட்ட நோய்ப்பாலை உடலில் ஏற்றி அரத்தத்தில் எதிர்ப்பொருள்களைத் தோற்றுவித்தல். இந்த எதிர்ப்பொருள்களும் நோய் நீங்கிய பின்னரும் உடலில் தங்கியிருந்து எதிர்ஆற்றலைத் தருவதாக அமையும்.