நோய்முகன் nōymugaṉ, பெ. (n.)
காரி கோள் (சனி); (தைலவ.தைல.);; Saturn.
[நோய் + முகன். நோய் தரும் காரி கோள் துன்பத்தையும் தருவது.]
காரிக்கோள் துன்பத்தைத் தருவது என்னும் கருத்தினால், அது நோய்முகன் எனப்பட்டது. ஆயின், இடைக்காலத்தில் தமிழ் பகைவர் காரி என்னும் தென்சொல்லை வழக்கு வீழ்த்தி ‘சனி’ என்னும் வடசொல்லைப் புகுத்தியதால் ‘சனியன்’ என்னும் சொல் வழங்கத் தலைப்பட்டது. தமிழர் அனைவரும் இனி நோய்முகன் என்னும் சொல்லையே ‘சனியன் என்பதற்குத் தலைமாறாக வழங்குக-பாவாணர் (வே.கநூல்4);.