நோய்ப்பாடியார் nōyppāṭiyār, பெ. (n.)
கழகக் காலப்புலவர்; a poet in Sangam age.
மறுவ. நொய்ப்பாடியார்.
[நோய்1 + பாடியார்]
இவர்தம் பாடலில் பிரிந்தோருறும் நோயை நன்கு
புலப்படுத்துவதால் இப்பெயர் பெற்றார் எனலாம். பாலை நிலவழியிலே பரற்கற்கள் நிலம்படும் மின்மினிபோலப் பரந்திமைக்கும் எனப் புனைந்துரைத்துள்ளார். இவர் செய்யுளில் நடுகற்குப் பீலிசூட்டும் வழக்கமும். நடுகல்லின் அருகிலே அவ்விரன் பிடித்திருந்த வேல் முதலியவற்றை வைக்கும் வழக்கமும் காணப்பெறுகின்றன. (அகநா.67);.
“யானெவன் செய்கோ தோழி பொறிவரி
வானம் வாழ்த்திப் பாடவும் அருளாது
உறைதுறந் தெழிலி நீங்கலிற் பறையுடன் மரம்புல்
லென்ற முரம்புயர் நனந்தலை அரம்போழ் நுதிய
வாளி அம்பின் நிரம்பா நோக்கின் நிரையம்
கொண்மார் நெல்லி நீளிடை எல்லி மண்டி
நல்லமர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும்
பிடும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய
பிறங்குநிலை நடுகல் வேலூன்று பலகை
வேற்றுமுனை கடுக்கும் மொழிபெயர் தேஎந்
தருமார் மன்னர் கழிப்பிணிக் கறைத்தோல்
நிரைகண் டன்ன உவலிடு பதுக்கை ஆளுகு
பறந்தலை உருவில் போய் ஊராத் தேரொடு
நிலம்படு மின்மினி போலப் பலவுடன் இலங்குபரல்
இமைக்கும் என்பநம் நலந்துறந்து உறைநர்
சென்ற ஆறே” (அக.67);