நோய்நொடி nōynoḍi, பெ. (n.)
1. பிணியும் துன்பமும்; disease with its sufferings. (சா.அக.);.
நோய் நொடி இல்லா உடம்போடு வாழவேண்டும். குழந்தைக்கு நோய் நொடி வராமல் வளர்க்கவேண்டும். நோய் நொடி இல்லா வாழ்வு வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினேன்.
2. நோயும் நோயின் பாதிப்பும்; illness and its effect.
வறுமையில் நோய் நொடிவந்தால் யார் உதவுவார்கள்.
[நோய்1 + நொடி. மரபுத்தொடர்]