நோயாளி nōyāḷi, பெ. (n.)
நோயால் தாக்கப்பட்டவன்; sick person, patient, invalid.
மருத்துவர் நோயாளியைக் கவனிக்கச் சென்றுவிட்டார்.
“நோயாளிக்கு ஆசை காட்டிச் சொன்னாற் போல” (பழ.);.
“நோயாளி விதியாளி ஆனால் பரிகாரி பேராளி ஆவான்” (பழ.);.
“நோயாளிக்குத் தெரியும் நோயின் வருத்தம்” (பழ.);.
[நோய் → நோயாளி.]