நோதல்1 nōtal, தொ.பெ. (vbl.n.)
1. பூடு முதலியவற்றுக்கு வருங்கேடு; disease affecting trees or plants.
2. எழுத்து முதலியவற்றின் மழுங்கல்; obliteration or other defect in a marked line, letter, figure or painting.
3. சாயஞ்சிதறுகை; spreading of dye in a cloth beyond the intended line.
4. ஏழைமை; poverty.
[நோ → நோதல்]
நோதல்2 nōtal, பெ. (n.)
1. துன்புறல்; to suffer.
2. நொந்து சொல்லுதல்; to be injured speech.
[நோ → நோதல்]