நோட்டம்1 nōṭṭam, பெ. (n.)
1. தட்டிப்பார்த்தல் முதலிய முறைகளைக் கொண்டு புரியும் பொன் வெள்ளிக்காசு பண ஆய்வு; examination of coins; assaying.
2. பொன்மணி முதலியவற்றின் ஆய்வு; scrutiny of gems, precious metals, etc.
3. விலைமதிப்பு; value.
அதன் நோட்ட மறியான் (வின்.);.
4. மதிப்பு (வின்.);; criticism, as by a rival artist or workman.
5. போட்டி; competition.
நோட்டத்திலே விலை வைத்துவிட்டார்கள் (வின்.);.
6. வெல்ல முயல்கை; attempt at wit; endeavour to excel, hinder or baffle another in speech.
‘வார்த்தை நோட்டத்தில் என்னபலன்’ (வின்);.
7. மதிப்பிடும் அல்லது தெரிந்து கொள்ளும் நோக்கம் கொண்ட பார்வை; searching glance.
தலைவர் மேடை ஏறியவுடன் கூட்டத்தை ஒரு நோட்டம் விட்டார்.
பொருள் விற்கும் சாக்கில்வந்து திருடப்போகிற வீட்டை ஒரு நோட்டம் விட்டான்.
ம. நோட்டம்; கு. நோட்ட; கோத நொட் (examine);; க. நோடு;து. நோட.
[நுல் → நுள் → நொள் → நோள் → நோடு நோட்டம் (வே.க.); = ஆய்வு ஆராய்ச்சி]
நோட்டம்2 nōṭṭam, பெ. (n.)
கணக்கு; account.
“நோட்டத்திற் செல்லெழுதி” (சரவண. பணவிடு.84);.
[நோட்டம்1 → நோட்டம்2]