நோட்டம்பார்1 nōṭṭambārttal, 4.செ.குன்றாவி. (v.t.)
1. தகுதியறிதல் (யாழ்.அக.);; to consider the fitness of.
2. விலை மதிப்பறிதல் (வின்.);; to appraise
3. நிலைமையாய்தல்; to consider one’s condition, state.
4. வேவு பார்த்தல்; to spy.
[நோட்டம் + பார்-த்தல்.]
நோட்டம்பார்2 nōṭṭambārttal, 4 செ.கு.வி. (v.i)
மிகக் கண்டிப்பாயிருத்தல் (வின்.);; to be too strict in dealings.
[நோட்டம் + பார்-த்தல்.]
நோட்டம்பார்த்தல் : எடுத்துக் கொண்ட மாழைக் கலவையிலே உள்ள மாழைகளின் (உலோகங்களின்); அளவை மதிப்பிடுவது நோட்டம் பார்த்தல் எனப்படும். சுரங்கங்களில் கிடைக்கும் மூலப்பொருள்களில் எந்த வகை மாழை எந்த அளவில் உள்ளது என மதிப்பிட்டு, அம் மூலங்களை (தாதுக்களை); வெட்டி யெடுப்பது நன்மைபயக்குமா என ஆராய்ந்து முடிவு செய்ய நோட்டம் பார்த்தல் மிகவும் பயன்படுகிறது. காசுகள், நகைகள் முதலியன செய்யப்பயன்படும் விலையுயர்ந்த தங்கம் போன்ற மாழைகளின் கட்டிகள் தூய்மையானவையா என ஆராயவும் இது பயன் படுகிறது. மாழைக் (உலோகக்); கலவைகளின் குறைகளைக் கண்டு ஆராயவும் பயன்படுகிறது. ஆராயவேண்டிய மாழை (உலோகம்); எதுவோ அதைப்பொறுத்து, நோட்டம் பார்க்கப் பலமுறைகள் வழக்கத்தில் இருக்கின்றன. ஆனால், பொதுவாக இருமுறைகள் உண்டு. அவை:
1. உலர்முறை (dry process);.
2. ஈரமுறை (wet process); மூலங்களில் உள்ள மாழை வகைகளை உருக்கிப்பின் பிரிப்பது உலர்முறை. மூலங்களில் உள்ள மாழைகளை வேதியியல் (இரசாயன); முறையில் பிரித்தல் ஈரமுறை.