நோக்கி nōkki, வி.எ. (adv.)
1. குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை இலக்காகக் கொண்டு; towards;
in the direction of
ஏவுகணை விண்னை நோக்கிப் பாய்ந்தது. ஒசை வந்த திசையை நோக்கி ஒடினாள். அவன் காட்டை நோக்கி நடந்தான்.
2. பார்த்து;to see.
“நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர்” (குறள்,1093);.
எபிரேயம். நோக்கக்.
[நோக்கு → நோக்கி.]