நோக்காடு nōkkāṭu, பெ. (n.)
1. நோவு, வலி; pain, pang, agony,
2. அரச (இராச); நோக்காடு (வின்.);; pangs of child-birth.
3.நோய்; sickness, disease.
‘கண்ணோக்
காடாம்” (பணவிடு.300);.
கொள்ளையா நோக்காடா? (உ.வ.);.
4. மனநோய் (வின்.);; mental worry.
5. வறுமை (யாழ்ப்.);; reduced circumstances, poverty.
[நோ + காடு → நோக்காடு. கடு → காடு. கடுகுதல் = மிகுதல்.]