நோக்கர்கள் nōkkarkaḷ, பெ. (n.)
வருங்காலத்தில் நடக்கவிருப்பதை முன்னரே கூறக்கூடிய அளவுக்கு ஒரு துறையில் நிகழ்வதை ஆழ்ந்து கவனிப்பவர்கள்; observers.
வரும் ஒலிம்பிக்கில் இந்தியா பல தங்கப்பதக்கங்களைப் பெறும் என்று விளையாட்டு நோக்கர்கள் கூறுகின்றனர். வரும் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வெற்றிவாய்ப்புக் குறைவு என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
[நோக்கு → நோக்கர் + கள்.]