நோக்கம்1 nōkkam, பெ. (n.)
1. கண்(திவா.);; eye.
2. பார்வை; eyesight, look, gaze, glance, view.
“கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கம்” (குறள்,1092);.
“நோக்கத் தொதுங்கு” (பழ);.
நோக்க நோக்குவ நோக்காமுன் நோக்குவன்” (பழ.);.
3. கோள் (கிரக); நோக்கு; aspects of a planet.
4. தோற்றம்; appearance, expression, cast of countenance.
[நோக்கு → நோக்கம்.]
நோக்கம்2 nōkkam, பெ. (n.)
1. உயர்ச்சி (வின்.);; height, elevation.
2. அழகு; beauty, attractiveness.
“மருணோக்க மடிந்தாங்கே மயல்கூர் கிற்பான் மன்னோ” (கலித்.10);.
“யாவர்க்கு நோக்கலாப் பெண்ணினோக்கு டையாள்” (கம்பரா. கர.6);.
3. காவல் (யாழ்.அக.);; watch.
4. இலக்கு, கருத்து; design, object, intention, aim, motive.
நீ அப்படிச் செய்வதற்கு நோக்க மென்ன? ஆதரவற்றவர்க்கு உதவுவதே எங்கள் நோக்கம்.
5. அறிவு; sense, intelligence.
“மருளிகொண்ட மடநோக்கம்” (கலித்.14);.
“நுண்ணி தினுணர் தனுமைந்த நோக்கில்” (மதுரைக்.517);.
6. கவனம்; attention, observation.
படிப்பில் நோக்கமாயிரு.
7. விருப்பம் (யாழ்.அக.);; desire.
8. குறிப்பு; indication sign.
வானம் மழை நோக்கமாயி ருக்கிறது.
ம. நோக்கம்
[நோக்கு → நோக்கம். = ஒருபொருளின் மேல் உள்ள நாட்டம்]