நோகு-தல் nōkudal, 5.செ.கு.வி. (v.i.)
வருந்துதல்; மனம் புண்படுதல்; get hurt of feelings, distressed in mind.
அவன் மனம் நோகும்படி நடந்து கொள்ளாதே. உன் பண்பற்ற பேச்சும் செயலும் அவரை நோகச்செய்து விட்டது.
[நோ → நோகு-தல்.]