நொ1 no, நகர மெய்யும் ஒகர உயிரும் சேர்ந்து பிறந்த உயிர் மெய் எழுத்து; the compound of ‘n’ and ‘o’
[ந் + ஒ – நொ]
நொ2 no, பெ. (n.)
1. துன்பம் (தொல். எழுத்து. 72);; pain, distress, suffering.
“நொவ்வுற லெய்தி” (கந்பு. திருவவ.39.);.
2. நோய் (வின்.);; disease, sickness.
ம. க. நோ
[நோ → நொ. ஒரெழுத்து ஒருமொழி.]
நொ3 no, பெ. (n.)
மெத்தெனப் பறக்கும் பறவையினம்; a kind of flying bird softly, gently.
“தாஅ வஞ்சிறை நொப்பறை வாவல்” (குறுந். 172:1);.
நொ4 no, பெ. (n.)
நொய்மை (திவா.);; lightness, slenderness.
“நொப்புணை வலியா” (பெருங். உஞ்சைக்.53:3);.
ம. நொச்சு; க., தெ., து. நுசி; [நோ → நொ.]
நொ5 nodal, 17 செ.கு.வி.(v.i.) & 16 செகுன்றாவி. (v.t.)
துன்புறுதல்; to suffer.
“நொக்கொற்றா” (தொல். எழுத்து. 72. உரை);.
“நொப்போவெள வுரிஞ்” (நன்.137);.
[நோ → நொ → நொ – தல்]