நொ, து மூவினத்தொடும் புணருமாறு

நொ, து இவ்விரண்டும் (முன்னிலை ஒருமை ஏவல்) வினை யாதலின்,நொக்கொற்றா நொச்சாத்தா நொத்தேவா நொப் பூதா – எனவும், நொஞ்ஞெள்ளாநொந்நாகா நொம் மாடா எனவும், நொய்யவனா நொவ்வளவா – எனவும், மூவினம்வருவழியும் அவ்வம்மெய்யே மிக்கன. து என்பதனொடும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. (நன். 158, 165 சங்கர.)