நொவ்வு1 novvudal, 5 செ.கு.வி. (v.i.)
1. மெலிதல்; to become thin, slender,emaciated.
“நொவ்விடை மடந்தை” (கம்பரா. காட்சி. 54);.
2. நோதல் (யாழ்ப்);; to ache, pain.
3. துன்புறுதல்; to afflict, to pester.
4. வருந்துதல்; to suffer.
[நொ → நொவ்வு → நொவ்வு – தல்.]
நொவ்வு2 novvu, பெ. (n.)
1. மெலிவு; thinness,
2. உடையுந் தன்மை; brittleness.
3. வாட்டம்; emaciation, drooping, fading.
4. வருத்தம் (வின்.);; pain, ailment.
5. விரைவு; rapidly, quickness.
நொவ்வுப் பறைவாவல்.
6. நோவு; disease.
[நொ → நொய்வு → நொவ்வு]