நொள்ளை

நொள்ளை1 noḷḷai, பெ. (n.)

   1. குருடு; blindness.

     “நொள்ளை நாகில்” (திருவிளை. பரிநரி.14);.

   2. நாகரவண்டு (சூடா.);; green beetle.

   3. விலங்குவகை; a beast.

     “உள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை” (அகநா. 53:2);

க. நொள்ளை.

     [நுல் (துளை); → நுள் → நொள் → நொள்ளை = கண் குழிந்த குருடு (வே. க.);.]

 நொள்ளை2 noḷḷai, பெ. (n.)

   கைக்குழந்தை (நெல்லை);; infant, baby.

     [நுல் = சிறுமை.நுல் → நுள் → நொள் → நொள்ளை (வே. க.);]