நொள்(ளு)

நொள்(ளு)1 noḷḷudal,    10 செ.குன்றாவி. (v.t.)

   மொள்ளுதல், முகத்தல்; to bale out, as water, to measure out, as grain.

     “குடங்கையில் னொண்டு கொள்ளவுங் கூடும்”. (சிலப். 10:85);

   தெ. நொல்லு (to level, collect);;   பர். ஒல்க்(olc); கூய். நெல்ப;   குரு. நொல்ல்நா (nollnā);;மா. லொலெ.

     [நுல் (துளை); → நொள் → நொள்(ளு);-தல் (வே.க.);. மொள்ளுதல் நீர்ப்பொருளையும், முகத்தல் கூலம் போன்ற பொருளையும் குறிக்கும். மொள்ளுதல், முகத்தல், விழுங்குதல் அனைத்தும் துளைத்தலினின்றே விரியும். முள் → மொள் → நொள் = விழுங்குதல், (சு.வி. 45);]