நொள்ளல்

நொள்ளல்1 noḷḷal, பெ. (n.)

   1. பார்வையற்றுக் கண்குழிந்த நிலை (வின்.);; the state of being blind and sunken-eyed.

   2. குழிவு; hallowness.

     [நுல் (துளை); → நுள் → நொள் → நொள்ளல் (வே. க.);.]

 நொள்ளல்2 noḷḷal, பெ. (n.)

நுளம்பு (திவா.);

 gnat

     [நுல் → நுள் → நுள்ளல் → நொள்ளல் = சிறியஉலங்கு (நுளம்பு);. நுல் = சிறுமை, கூர்மை.வே. க.);]