நொள்கு1 noḷkudal, 5 செ. குன்றாவி. (v.t)
நொள், 1 (யாழ்.அக.); பார்க்க;see nol-1.
[நொள்1 → நொள்கு → நொள்கு-தல்]
நொள்கு2 noḷkudal, 5 செ. கு.வி. (v.i.)
1. சுருங்குதல்; to contract, as thread.
‘நூல் நொள்கிற்று’ (நன். 454, மயிலை.);.
2. இளைத்தல் (யாழ்.அக.);; to languish, become tired.
[நுல் (நெகிழ்வு); → நுள் → நொள் → நொள்கு → நொள்கு-தல்]