நொளநொள-த்தல்

நொளநொள-த்தல் noḷanoḷattal,    4 செ.கு.வி. (v.i.)

   1. குழைதல்; to become soft from overripeness, to be mashy.

   2. வழுவழுப்பாதல்; to be sleek and smooth, as a Snake or a leech.

     [நுல் (நெகிழ்ச்சி); → நுள் → நொள் → நொள → நொளநொளு-த்தல்.]

துளைக்கப்பட்ட பொருள்கள் உளுத்த மரம் போற்கட்டு விட்டுப் போவதனாலும், கையினாலும் கோலினாலும் எளிதாய்த் துளைக்கப்படும் அல்லது ஊடுருவப்படும் பொருள்களெல்லாம், நீருங் கூழும் போல் நெகிழ்ச்சிப் பொருள்களாகவே யிருப்பதனாலும், துளைத்தற் கருத்தினின்று நெகிழ்ச்சி அல்லது தளர்ச்சிக் கருத்துத் தோன்றும். (வே.க. நுல்4);.