நொறுங்கு1 noṟuṅgudal, 5 செ.கு.வி. (v.i.)
1. உடைந்து சிறுசிறு பகுதியாதல்; பொடியாதல்; to be broken, crushed, smashed to pieces.
கற்கள் பட்டதினால் கண்ணாடிகள் நொறுங்கின. நொறுங்கத் தின்றார்க்கு நூறு வயது (பழ.);. மனம்
நொறுங்குண்டது. மனம் நொறுங்குதல் போல் வருந்துதல். (உ.வ.);
2. பின்னிரங்குதல்; to be broken down in spirit, to become contrite.
நொறுங்குண்ட மனம் (வின்.);.
[நுல் → நுள் → நுறு → நொறு → நொறுங்கு → நொறுங்கு-தல். இது தன்வினை வடிவம்.]
நொறுங்கு2 noṟuṅgu, பெ. (n.)
1. நொய் (சூடா.);; broken grain, grits.
2. தூள்; powder.
“நொறுங்காய்க் கூடியிட்டன கொடுமுடித் துறுகற்கள்” (சூளா.சீய. 145);.
3. நுண்மை (வின்.);; minuteness smallness.
[நுல் → நுள் → நுறு → நொறு → நொறுங்கு. நுல் = நுண்மை, சிறுமை.]