நொறுக்கு1 noṟukkudal, 5 செ.குன்றாவி, (v.t.)
1. சிறுசிறுபகுதிகள் ஆகுமாறு உடைத்தல்; பொடியாக்குதல்; to break, crack, crush, smash to pieces.
செங்கல்லை நொறுக்கிக் கொடு.
2. அரத்தக்காயம் பண்ணுதல்; to bruise.
3. நையப்புடைத்தல்; to beat soundly.
“வீரரை நொறுக்கி” (திருப்பு:574.);.
சண்டையில் எதிரியை நொறுக்கிவிட்டான்.
4. மிகுதியாய் உண்ணுதல்; to eat in large quantities.
பந்தியில் ஒரு நொறுக்கு நொறுக்கிவிட்டான் (உ.வ.);
க. நுர்கு (g);.
[நொறுங்கு → நொறுக்கு → நொறுக்கு -தல். இது பிறவினை வடிவம்]
நொறுக்கு2 noṟukku, பெ. (n.)
1. பொடி யாக்குகை; crushing.
2. நன்றாயடிக்கை; beating soundly, thrashing.
சண்டையில் எதிரியை நொறுக்கு நொறுக்கு என்று நொறுக்கி விட்டான்.
க. நுர்கு
[நொறுங்கு → நொறுக்கு.]