நொறில் noṟil, பெ. (n.)
1. விரைவு (சூடா.);; quickness, speed.
“நொறில்பரிர் தேர்” (நைடத.போர்புரி.3);.
2. நுடக்கம்; suppleness, pliability.
“நொறிலியற் புரவி யதியர் கோமான்” (தொல்.சொல். 396,உரை);.
3. ஒடுக்கம் (பிங்.);; shutting, closing, contracting.
4. நொளில் பார்க்க;see no/
“செருநில நொறிற் செந்நீரினுள்” (சூளா.அரசி.274);.