நொய்

நொய் noy, பெ. (n.)

   1. குறுநொய் (திவா.);; grits, groats.

   2. இலேசு (சூடா.);,

 brittleness, fragility, delicateness.

   3. மென்மை (வின்.);; softness, lightness.

   4. நுன்மை (வின்.);; smallness, minuteness.

அரிசி நொய்மையாகிவிட்டது.

   5. பன்னீர்; rose water.

   6. தவிடு; bran.

     [நுல் → நுள் → நொள் → நொய் = நொறுங்கிய கூலம். நூல் = நுண்மை, மென்மை, சிறுமை, நொய்ம்மை]