நொய்ய

நொய்ய1 noyya, பெ.எ. (adj.)

   1. மென்மையான; soft, tender.

     “அனிச்சப் போதி னதிகமு நொய்ய” (கம்பரா. கோலங். 14);.

   2. வலியற்ற; weak.

நொய்ய புத்தி. நொய்ய உடம்பு.

   3. சிறுமையான; small, mean, poor.

     “நொய்தி னொய்ய சொல்” (கம்பரா. பாயி. 5);.

   4. வசையான (வின்.);; lampoon.

நொய்ய சொற் பெறாதவன்

   5. நுட்பமான; minute.

     “பல்கல நொய்ய மெய்யணிந்து” (சீவக. 991);.

     [நொய் → நொய்ய=சிறிய, அற்ப. சின்ன என்பதை நொய்ய என்பது குடந்தை வழக்கு.]

 நொய்ய2 noyya, வி.எ. (adv.)

   கடுமையாக; severely.

     ‘அவனை நொய்யப் புடைத்தான்’

     [நை2 → நைய → நொய்ய]