நொய்ம்மை noymmai, பெ. (n.)
1. தளர்ச்சி (யாழ்.அக.);; looseness.
2. உறுதியின்மை; flimsiness, weakness, futility, as of arguments.
3. கனமின்மை; lightness.
“மெய்ம்மை சீர்மை நொய்ம்மை வடிவம்” (மணிமே. 27.254);.
நீரில் நீந்தும் போது உடல் நொய்ம்மையாக இருக்கும்.
4. மென்மை; softness, slenderness.
சிறு குழந்தையின் கை நொய்ம்மையாக இருக்கும்.
5. மனத்திட மின்மை; weakness of mind, pusillanimity, effeminacy, cowardice.
6. மனவுருக்கம் (வின்.);; tender-heartedness, sensibility, delicacy of feeling, quick perception of an injury or affront.
7. வறுமை (யாழ்.அக.);; poverty, indigence.
8. நுண்மை, சிறுமை; minuteness, thinness, smallness.
9. இழிவு (நாலடி, 41);; triviality, insignificance. meanness.
10. நேர்த்தி; niceness, fineness in workman-ship.
11. குற்றம் (வின்.);; injuriousness, offensiveness, as of language.
[நுல் = நெகிழ்ச்சி, சிறுமை, மென்மை. நுல் → நுள் → நொள் → நொய்.
ஒ.நோ. தொள் → தொய்.
நொய் → நொய்மை (வேக.);]