நொய்ப்பம் noyppam, பெ. (n.)
1. திறமை; skill, ability.
“மரக்கலம் அலையாதபடி கடைந்த நொய்ப்பம்” (திவ். திருப்பா. 30, வியா 254);.
2. இலேசு (வின்.);; delicateness, tenderness.
இந்த வேட்டி மிகவும் நொய்ப்பமாக இருக்கு.
[நுள் (மென்மை, கூர்மை); → நொள் → நொய் → நொய்ப்பு → நொய்ப்பம்]