நொய்து

நொய்து noytu, பெ. (n.)

   1. கனமில்லாது இலேசானது; that which is light.

     “விண்ணினொய்தாய்” (ஞானவா. வீதக. 76);.

     “நொய்தாந் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின்” (நீதிவெண்பா. 8);.

   2. மெல்லியது; that which is soft.

துணி மிகவும் நொய்து.

   3. இழிவானது; that which is poor, mean.

     “நொய்தி னொய்ய சொல்” (கம்பரா. பாயி. 5);.

   4. விரைவு; quickness.

தலைவர் உரை மிகவும் நொய்தாயிருந்தது.

     “ஆயிழை நொய்தி துரைபொரு ளுண்டெனின்” (சீவக. 1767);.

     “கொடியவே

தாளமெல்லா நொய் தினிற் செற்றான்”(சேதுபு. வேதாள.98);

     [நொய் → நொய்து]