நொன்னை noṉṉai, பெ. (n.)
1. நையாண்டி; mimicking, mocking.
2. ஏளனம்; taunt, ridicule, sarcasm.
[நொல் + நை. சொல்லில் மறைந்து வரும் நகைச் சுவையைக் குறிக்கும்.]
அதியமானிடமிருந்து தொண்டைமானுக்குத் தூது சென்ற ஒளவை நெய் தோய்ந்த புதியபோர்க் கருவிகளைப் பார்த்து, அதியமானிடம் இருப்பது குருதி தோய்ந்த கருவிகள் என்று கூறுவதாகும்.