நொந்து1 nondudal, 5 செ.கு.வி. (v.i.)
1. அழிதல்; to perish.
“நூறு கோடி பிரமர் கணொந்தினார்” (தேவா. 1218, 3);.
2. பதனழிதல்; to become spoilt.
3. வருந்துதல்; to suffer;
to afflict.
4. வறுமை; penury.
க. நொந்து.
[நொது → நொந்து → நொந்து-தல்.
நொதுத்தல் = அழிதல்]
நொந்த கண் இருக்க நோகாக் கண்ணுக்கு மருந்து (பழ. நொந்து அறியாதவர் செந்தமிழ் கற்றோர். (பழ);
நொந்து2 nondudal, 5 செ.குன்றாவி, (v.t.)
தூண்டுதல்; to trim.
“நொந்தாத செந்தீ” (பதினோ. காரை. திருவிரட், 13);.
[நுந்துதல் = தூண்டுதல். உந்து → நுந்து → நொந்து → நொந்து-தல்]