நொந்துகொள்(ளு)-தல் nondugoḷḷudal, 16 செ.கு.வி. (v.i.)
1. வருத்தப்படுதல்; regret one self.
“தண்புனற் பூசலல்லது நொந்து” (புறநா. 42:7);. தெரியாமல் உன்னை நம்பினேனே! என்று நொந்து கொண்டான்.
2. குறைபட்டுக் கொள்ளுதல்; curse one self.
என்னபடித்து என்ன பயன் வேலை கிடைக்கவில்லையே என்று நொந்து கொண்டான்.
3. குறை கூறுதல்; charge, blame.
நீ சரியாகப் படிக்காததற்கு ஆசிரியரை ஏன் நொந்து கொள்கிறாய்.
[நொந்து + கொள்(ளு);-தல்]