நொதுமல்

நொதுமல் nodumal, பெ. (n.)

   1. புறக்கணிப்பு (உதாசீனம்);; indifference, neutrality.

     ‘பகைநொதுமல் நண்பென்னும் மூன்று பகுதியினும்’ (குறள், 12, அதி. அவ.);.

   2. அன்பிலார் கூற்று; world of an indifferent person.

     “நொதுமன் மொழியல்” (அகநா. 39);.

   3. மென்மை; smoothness, as of a fine cloth.

     “நெதுமல் பெற்றிடு நுண்டுகில்” (கந்தபு. திருவி. 122);.

     [நொது → நொதுமல்]