நொண்டிச்சாக்கு noṇṭiccākku, பெ. (n.)
நொண்டிச்சமாதானம் பார்க்க;see mond-ccamadaram.
வீட்டுப்பாடம் ஏன் எழுதவில்லை என்று கேட்டால் துரவல் (பேனா); இல்லை என்று நொண்டிச் சாக்குச் சொல்லுகிறான். நொண்டிக்குதிரைக்குச் சறுக்கினது சாக்கு (பழ.);
[நொண்டி + சாக்கு – நொண்டிச் சாக்கு = தப்பித்துக் கொள்ள ஏதாவது கரணியம் காட்டுதல். சார்த்து → சாட்டு → சாக்கு. நொண்டிக்குச் சறுக்கினது தான் சாக்கு பிறவியிலே நொண்டி யானவன் என்றோ சறுக்கி விழுந்ததைச் சாக்காகச் சொல்லுவது போல.]