நொட்டை1 noṭṭai, பெ. (n.)
சுவை மிகுதியால் அண்ணத்தில் நாவைச் சேர்த்துக் கொட்டுகை; smack, as a sign of keen relish or anticipation.
என்ன அந்தப் பழத்தைக் கண்டு நொட்டை யிடுகிறாய்?
க. லொட்டெ,
ஒலிக்குறிப்புச் சொல்.
நொட்டை2 noṭṭai, பெ. (n.)
குற்றம்; fault.
[நுள் (துளை); → நொள் → நொட்டை (மு.தா.);. துளையுள்ள சில பொருள்கள் குற்றமுள்ளனவாகக் கருதப்படுவதால் துளைப் பெயர் குற்றத்தைக் குறிக்கும். உள் → ஒள் → (ஒட்டை); → ஒட்டை = குற்றம். சுள் → (சொள்); → சொட்டு → சொட்டை = குற்றம்]