நொட்டைவிடு-தல் noḍḍaiviḍudal, 20 செ.கு.வி. (v.i.)
உண்டு முடித்த பின் பொந்திகை (திருப்தி); யைக் காட்டும் முறையாக நாக்கால் கொட்டி ஒலி எழுப்புதல்; utter a sound expressive of relish after a good meal; smack one’s lips.
வயிறு முட்டச்சாப்பிட்டு நொட்டை விட்டாயிற்று.
[நொட்டை + விடு-தல்.]