நொட்டாங்கை

 நொட்டாங்கை noṭṭāṅgai, பெ. (n.)

   இடது கை; left hand.

நொட்டாங் கையால் செய்யும் வேலை சிறக்காது.

மறுவ. ஒரட்டாங்கை.

இடது கையைப் பீச்சாங்கை என்றும், நொட்டாங்கை என்றும் கூறுவது வழக்கம். நொட்டை என்றால் குறைவானது. இடதுகை பெரும்பாலோருக்குப் பலமான செய்கை களுக்குப் பயன்படாது. நல்ல செயல்களை அக்கையால் செய்ய விடமாட்டார்கள். பலவீனமான கை என்பதால் நொட்டாங்கை என்றும், மலங்கழுவப்பயன் படுவதால் பீச்சாங்கை என்றும் பெயர் பெற்றது.

     [ஒரட்டுக்கை = இடதுகை. ஒரட்டுக்கை → ஒரட்டாங்கை → நொரட்டாங்கை → நொட்டாங்கை]